பால்வழியில் பாவையிவள்
வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள்
வட்டமிட்டு பறந்துவர
நட்போடு என்னை அழைத்துச்சென்று
இறக்கிவிட்டன
வெண்பஞ்சு வானமென்னும்
மெத்தையிலே நானும் விழ
புகை மண்டல தேவதைகள்
கைப்பிடித்து அழைத்துச்செல்ல
வானவில்லால் கட்டிய நிலவு
ஊஞ்சலில் இவளை அமரவைத்தன
நட்சத்திரங்கள் என்னருகமர்ந்து
ஒன்றுகூடி ஒளி வீச
சூரியனும் தூர நின்று கடும்
குளிரை மறையச் செய்ய
பூமி வந்து அருகமர்ந்து
பசுமைஎன்னும் விசிறி வீச
கோள்களெல்லாம் என்னை
சுற்றிவந்து கோலாக்கலமூட்ட
பால்வழி அண்டத்தில் நிகழ்ந்தது
இவளுக்கு உணவு பரிமாற்றம்
வானின் விண்கற்கள் இவள் நடைபயில
இடம் விட்டு நகர்ந்து செல்ல
குளிர்காற்று செல்லமாக மெல்ல வந்து
அந்த பல்லாக்கு ஊஞ்சலில் ஆட்டிவிட
மேகம் சூழ்ந்த தென்றலது தாலாட்டுபாடிட
கண்ணுரங்கினேன் நான் கண்ணுரங்கினேன்
விழித்துப்பார்த்தேன், வாழ்ந்துகொண்டிருந்தது
வானுலகமல்ல கனவுலகமென்று உணர்ந்தேன்
பால்வழியில் பாவையிவள் மனம்மகிழ்ந்தேன்
இந்த மண்ணுலகிற்கு விண்ணுலகை ஓர்நாள்
விருந்துக்கு அழைத்துவர ஆசைகொண்டேன்.
...கவியாழினி...
நல்ல கனவு வாழ்த்துக்கள்
ReplyDeleteமிகுந்த மகிழ்ச்சிகள் தோழி :-)
Deleteநல்ல அழகான வரிகள் தொடருங்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வரவிலும் வாழ்த்திலும் மிகுந்த மகிழ்ச்சிகள் :-)
Delete