Sunday, 15 December 2013

மார்கழி அறிவியலோடு அன்றும் இன்றும்


மார்கழி மாதத்திற்கென பல சிறப்புகள் உண்டு மாதங்கள் பண்ணிரெண்டிலும் மிகவும் கலைகட்டும் மாதம் இந்த மார்கழி. மாதம் முப்பது நாட்களும் குழந்தைகள், கன்னிப்பெண்கள் ,மகளிர், ஆடவர்  என அனைவரும் பக்தி ,கோலம் , கலை ,தூய்மையான நீராடல் என சுறுசுறுப்போடு இருக்கவைக்கும் மார்கழி பற்றிய சில விவரம் நாமும் அறிவோம்மார்கழி மாதத்தில் விடியற்காலை எழுந்து நீராடி கோலமிட்டு கடவுளை வணங்குவதன் உண்மை  காரணம் .

அன்றைய நாட்களில் மார்கழி :-

             கோலமிட்டு அதன் நடுவில்  பூசணி பூ வைப்பதன் உண்மை காரணம் நம்மில் பலருக்கும் தெரியாது ஆனால் என் பாட்டி வைத்தார் அதனால் என் தாய் வைத்தார் .என் தாய் சொன்னதால் நானும் வைத்து வருகிறேனென பெண்கள் கோலமிட்டு பூ வைத்து வருகின்றனர் .

             ஆனால் உண்மை அன்றைய நாட்களில் ஓர் வீட்டில் பெண் பிள்ளை இருக்கிறார்கள் என்பது வெளியில் தெரியாது பெண்கள் பெரும்பாலும் வீட்டினுள்ளே இருந்து பழகிய காலம் .அன்றைய காலத்தில் வாசலில் பெண்கள் விடியற்காலையில் எழுந்து சாணம் தெளித்து கோலமிட்டு அந்த கோலத்தின் மத்தியில் சாணம் பிடித்து வைத்து அதில் பூசணி பூவை வைப்பார்கள் , கன்னிப்பெண்கள் இல்லாத வீட்டில் கோலமிட்டு பூசணி பூ வைக்கமாட்டார்கள் கோலத்தின் நடுவே சாணம் மட்டுமே பிடித்து வைப்பார்கள் .

           பெரியவர்கள்   இளைஞர்கள்  குழந்தைகள் அனைவரும் பஜனை பாடிக்கொண்டு ஒவ்வொரு வீதி வழியாக வருவார்கள் அப்போது ஒவ்வொரு வீட்டிலும் வாசலில் வரைந்துள்ள கோலத்தையும் அதில் வைக்கப்பட்டுள்ள பூசணி பூவையும் பார்த்து இந்த வீட்டில் திருமணத்திற்கு உரிய பெண்ணிருக்கிறாள் என தெரிந்து கொண்டு அந்த வீட்டில் சென்று பெண் கேட்டு அடுத்த மாதமான தையில் திருமணம் ஏற்பாடு செய்வார்கள். வீட்டில் திருமணதிற்கு உரிய பென்னிருகிறாள் என்பதை சுட்டிக்காட்ட இந்த வழக்கம் பின்பற்றினர் நம்முடைய மக்கள் .

            இந்த பூசணி பூக்களை ஒன்றாக சாணத்தோடு எடுத்து வைத்து 29 -பது நாளோடு நிறுத்தாமல் பொங்கலன்றும் வைத்து கன்னி பொங்கல் அன்று அந்த 30 நாளுக்குமுரியவற்றை சேர்த்து எடுத்து சென்று ஆற்றில் கன்னி பெண்கள் சேர்ந்து நடுவில் வைத்து கும்மி பாட்டு பாடி ஆற்றில் கரைத்து விடுவது பண்டைய வழக்கம் .

அறிவியல் காரணம் :

           மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் காற்று மண்டலத்தில்ஓசோன்மிக அதிகமாகக் கிடைக்கிறது. இந்த ஓசோன் படலம் தான் சூரியனிடம் இருந்து வருகின்றஅல்ட்ரா வயலட் கதிர்கள்என்று சொல்லப்படுகிற, கேடு விளைவிக்கின்ற புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி, உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கிறது.
        
            மார்கழி மாத அதிகாலைகளில் சூரியனின் உதயத்திற்கு முன்பாக அதிகமாகக் கிடைக்கும் இந்த ஓசோனுக்கு வீரியம் அதிகம். இதைச் சுவாசிப்பதால் நம் உடலில் உள்ள ரத்தம் விரைவாகச் சுத்தம் அடைகிறது. நரம்பு மண்டலத்தைத் துடிப்பாக வைத்துக் கொள்ள முடிகிறது. அதனால் நினைவாற்றல் பெருகுகிறது.
        
              ஓசோன் நிறைந்த மார்கழி மாதக் காற்று தோலுக்கும், வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய் தீர்வுக்கும் கூட மிகவும் உதவியாக இருப்பதாகக் கூறுகிறார்கள்இவ்வாறு நன்மை பயக்கும் ஓசோனைச் சுவாசிப்பதற்கு நாம் வெளியில் செல்ல வேண்டும். இவ்வளவு அதிகாலைக் குளிரில் வெறுமனே மக்களை வெளியே சென்று ஓசோன் நிறைந்த காற்றைச் சுவாசிக்கச் சொன்னால் பலர் கேட்க மாட்டார்கள் என்று அதில் பக்தியை சேர்த்து நம் முன்னோர் கட்டாயமாக்கி விட்டார்கள்

           ஓசோன் வாயு அதிகமாகக் கிடைக்கும் அந்த அதிகாலை நேரத்தை வழிபாட்டு நேரமாக்கி விட்டார்கள்அதிகாலையில் விழித்தெழுந்து வாசலில் நீர் தெளித்து சாணமிட்டு மொழுகி கோலமிட்டு, ஆற்றங்கரைக்குச் சென்று நீராடுவது, கோவிலுக்குச் செல்வது, பஜனை செய்வது போன்ற செயல்களில் உடல் ரீதியான நல்ல மாற்றங்களும் நிகழ்கின்றன. அதோடு ஆன்மிக வளர்ச்சியும் ஏற்படுகிறது.

இன்றைய நாட்களில் மார்கழி :-

    பெரும்பாலும்  இன்றைய நவீன காலத்தில் பெண்களும் ஆண்களும் பணியின் சுமையால் பொருளாதாரத்தின் காரணமாக நேரம் தவறாது உழைக்கின்றனர் .இதில் கோவிலுக்கு செல்லவோ ,காலை எழுந்து வீட்டை மொழுகி  பெரிய பெரிய கோலமிடவோ நேரம் செலவிட விரும்புவதில்லை .இவர்கள் இந்த ஒரு மாதத்திலாவது இவற்றை கடை பிடித்தால் உடல்நலத்திற்கு நல்லது என்பதாலும் , கோலம் என்ற கலாசாரம் மறைந்து போகாமல் பெண்கள் ஓரளவேனும் கோலம் தெரிந்துகொள்ளவும் இன்றும் நாம் மார்கழியில் அதிகாலையில் இல்லையென்றாலும் சிறிது முன்னமாக எழுந்து கோலமிட்டு  நீராடி தெய்வத்தை வணங்குவதை பழகச்  சொல்லி வருகிறோம் .


...கவியாழினி ...

1 comment: