மேகமகளிடம் காதல் கொண்ட
காற்று வாலிபன்
காதல் ஆசையில் தீண்டிட
கருவாக உருவாகும்
மழைத்துளி மகள் அவள்
வாழ ஆசைகொண்டு பூமிநோக்கிட
வரும் வழியில்
காலங்கள் மாறிவர பூப்பெய்தும்
அவளை தீண்டிடாமல்
மக்கள் குடைகளுக்குள் தஞ்சமுற
மீறியும் தீண்டிவிட்டால்
நடக்கிறது தலை குளியல்
அவளின் வருகையில் மகிழ்ந்து
ஆற்றங்கரைகளிலும் ஓடைகளிலும்
நடக்கிறது மகிழ்ச்சி திருவிழாக்கள்
பருவக்காதல் அவளையும்
எட்டிவிட நிகழ்கிறது சூரியனோடு
காதல் திருமணம்
மணந்த அவனோடு சங்கமித்து
மகிழ்ச்சி வாழ்வில்
ஆவியாகி அவனை சென்றடைய
காதல் கணவன்
அன்பில் மறந்து போகிறாள்
வாழ்ந்த பூமி
காய்ந்து கொண்டிருப்பதை
பூமி ஈன்ற மகள்களாம்
மரங்கள் தாயைகாக்க
மேக மகளுக்கு முறையாக
ஈன்றெடுக்கின்றன காற்றென்னும்
மகனை மீண்டும் நடக்கிறது
இயற்கையின் காதல் மறுசுழற்ச்சி
...கவியாழினி...
அருமை தோழி
ReplyDelete