Sunday, 6 October 2013

காதலனை வழியனுப்பும் காதலி

நான் துடிக்கும் வேதனை 
அவனையும் வதைக்குமே 
எப்படி தேற்றப்போகிறான் 
பார்க்கும் இடங்களிலும் 
பாராத நினைவிலும் நான் 
நின்றுகொண்டே இருப்பேனே 

என்னவனிடம் குடியிருக்கும் 
என் நினைவுகளே 
எங்கோ போய் 
தற்கொலை 
செய்துகொள்ளுங்கள் 
அவன் புது நினைவுகளுடன் 
புதுவாழ்வை தொடரட்டும் 

ஆயிரம் மலர்களிலும் 
அந்திவான நிலவிலும் 
வீசும் தென்றலிலும் 
விடியற்காலை பொழுதிலும் 
என் நினைவுகள் பளிச்சிடுமே 

இவளின் நினைவுகள் 
அவனின் இதயம் விட்டு 
சென்றிட வேண்டுமே 
இனியவளின் நினைவுகள் 
அதில் புகுந்திடவே 
மகிழ்ச்சி அவன் 
மனமெங்கும் இனிதாய் 
நிறைந்திட வேண்டும் 

வலியோடு நீ மாலைசூட 
வாழ்க்கை வழிதெரியாமல் 
போகக்கூடும் நீ 
வலிபொருத்து 
விழிநீரால் இதயத்தின் 
நினைவை அகற்றிடு 
வருபவளின் கைபிடித்திடு 

உன் மனமென்னும் 
வீட்டில் மேடையமைத்து 
ஒட்டடை தட்டிடு 
உள்மனதில் அவளை 
புகுத்தி புதுவிழா எடுத்து 
புது வாழ்வில் நுழைந்திடு ...

...கவியாழினி...



2 comments:

  1. nijamaana kaathal vali vaarthaikal

    ReplyDelete
    Replies
    1. அனுபவப்பட்டு எழுதுவதை விட அனுபவித்து எழுதுவதிலும் கவிதை அழகு உள்ளது ....மிக்க மகிழ்ச்சி சகோ தங்கள் வருகையில் .

      Delete