Saturday, 5 October 2013

மழையோடு ஓர் கற்பனை உறவு

இதமான மழைச்சாரலுடன் 
இலகுவான நடை நடக்க 
வந்துவிழுந்த மழைத்துளிகள்!!! 

மோகம் கொண்டு வந்து 
தேகம் தீண்ட நினைத்து கல்லில் 
தெறித்த பின் தெளிந்தாயோ 
அனுமதியில்லாமல் - பெண்மை 
தீண்டினால் அழிக்கப்படுவாயென்று!!! 

உள்ளம் புரிந்து என் இதழ்களில் 
சத்தமின்றி பக்கம்வந்து தித்திக்க 
முத்தமிடுகிறாயே எப்படி 
தெரிந்தது என்னுள்ளிருக்கும் -காதல் 
உன்னுள்ளும் இருந்ததோ!!! 

நனைந்தபடி நான் செல்ல தலை 
துவட்டிய தாயின் அன்பில் 
உணர்ந்தேன் உன் தாய்மையை 
எவ்வளவு அழகாய் - உன் கரங்களால் 
என்னை தலை குளிக்கவைத்தாய்!!! 

நனைந்த புத்தகத்தை பாதுகாக்க 
நான் ஓடி செல்கையில் ஒரு நிமிடம் 
மிதமானது உன் வேகம் புரிந்தேன் 
தோழமை உணர்வுகொண்டு - என் 
இனிய நட்ப்பாக வந்தது நீயென்று!!! 

...கவியாழினி...



3 comments:

  1. உண்மையே , அருமை வாசகம்
    அருமை வரிகள்
    நெஞ்சை தொட்டன வார்த்தைகள் கவியாழினி
    palani kumar

    ReplyDelete
    Replies
    1. உணர்ந்து ரசித்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சிகள் தோழமையே ...

      Delete
  2. என்னை ரசிப்பவர் சிலர் ...
    என்னால் நனைபவர் பலர் ... !!!

    ReplyDelete