Wednesday 18 December 2013

ரணத்தின் தழும்புகள்


கணவனிழந்த   தனிமை பெண்ணிவள் 
தன்மானத்தோடு தனியே வாழ்ந்தால் 
விடவில்லை  காமமுடன் 
கயவர்கூட்டம் மாற்றியது அவளை 
=======விலை மாதுவாய்======

தாய்தந்தையற்று தனித்து கிடந்தான் 
சிறுவனிவன் அலைந்து திரிந்தான் 
பசியின்கொடுமை நீட்டியகையில் ஒன்றும் 
போடவில்லை திருடிஓடி தின்றவனிடம்  
வயிறும் சொல்லவில்லை திருடியதை 
உன்ன மாட்டேனென்று மாறிவிட்டான் 
======திருடனாக====== 

தொலைக்காட்சியும் இணையத்தின் 
வேண்டாத தளங்களும் காட்டியது 
அந்தரங்கத்தை கண்டபடி 
தனித்துக்கொண்டான் காமத்தை 
அடுத்தவீட்டு சிறுமியிடமும் வெளியில் 
சொல்ல தயங்கும் ஊமை 
கண்ணியிடமும் மாறிப்போனான் 
======காமுகனாய்======

வேலைத்தேடி அலைந்தான் உழைக்கிறேன் 
கொடுஎன்றான் கொடுக்கவில்லையாரும் 
பசியின் கொடுமை மாற்றியது வழிபறியில் 
வேலையில்லை என்றவனே வந்துவிட  
இருப்பதை எல்லாம் கொடுத்து உயிர்த்தப்பி 
ஓடினான் இன்று மாறிவிட்டான் பிரபல
 ======அடிதடியாலனாய்======

மன்னிக்க வேண்டிய தவறுகளை 
மலையாக வார்த்தைகளால் வதைத்து 
கொட்டியது சமூகம்; திருத்த வேண்டிய 
சட்டமும் கேளிசெய்யவே வெறுத்துப்போனான்
 வீழ்த்தி தள்ளினான் உயிர் அருமை 
தெரியாமல் இன்று உலா வருகிறான் 
======தீவிரவாதியாய்====== 

பிறப்பதில்லை இங்கு யாரும் 
சமூகதுரோகிகளாய் மாற்றுகிறோம் 
துரோகிகளாய்  நாம்  அன்பும் 
அரவணைப்பும் அடிப்படை 
உரிமையும் இல்லாமல் 
போகவே மாற்றபடுகிறார்கள் 
சமூக துரோகிகளாய் 
படும் ரணங்கள் காயமால் மாற்றமிட 
தழும்புகளாய் மாறுகின்றன 
======ரணத்தின் தழும்புகள்====== 

 ...கவியாழினி...

(இங்கு இப்படைப்பை பதிவதில் எனக்கும் வருத்தமே  இங்கு சுட்டி காட்டும் சூழ்நிலைகளால் மட்டுமே அவர்கள் அப்படி மாற்றம் பெற்றார்கள் என்பது என் கருத்து இல்லை இப்படியெல்லாம் மாற்றமடையும் இவர்களுக்கு நம்மால் முடிந்த அன்பை காட்ட அவர்கள் சமூக விரோதிகளாக  மாற்றம் பெறாமல் தடுக்க முடியும் என்பதே என் கருத்து அதை உணரவே இங்கு இந்த படைப்பு உதாரணம் : பசியில் துடிப்பவனுக்கு ஒரு வேலை உணவு கொடுத்தால் அவன் திருடனாவது இன்றைய பொழுதில் நீ இட்ட ஒரு வேலை சோற்றில்  தடுத்து நிறுத்தப்படும் .)

No comments:

Post a Comment