Tuesday 8 October 2013

சருகுகளின் வாசனை

கருவறையில் வெளிவர 
கல்லறையாய் இருட்டுச்சமூகம் 
கண்ணை மறைக்கிறதா 
கட்டியெடுத்து அனைத்தாலும் 
கண்ணே அரவணைப்பென்று 
கனக்கிறதா அழும் மனம் 

உயிர் கொடுத்தவன் யாரென்றும் 
உன்னை ஈன்றவள் யாரென்றும் 
உன்னவர்களை உள்ளம் தேடுகிறதா 
உல்லாசத்தில் ஊஞ்சலாடி 
உறவின் அர்த்தம் உணராதவர்கள் 
உள்ளத்தின் ரணம் அறிவரோ 

பெற்றோரும் மற்றோரும் 
பெயர்சூட்டி கூட்டம் கூட 
பெற்றவர் பெயர் தெரியாமல் 
பெயரற்றவளென வாழ்க்கை 
பெரும் சோகமாகிறதா 

அள்ளியெடுத்து கொஞ்சி 
அனைத்து ஆசைமுத்தமிட்டு 
அன்போடு விளையாடுகையில் 
அனாதை என்ற பெயரோடு 
அடியெடுக்க தயங்குகிறதா மனம் 

நடைபயில ,நன்கு குளிப்பாட்ட 
நகையோடு அலங்கரிக்க -உண்ண 
நல்ல உணவூட்ட உறவுகள் சூழ ; 
நான் செய்கிறேன் என் பணியை 
நான்கு வயது எட்டுமுன்னேவென 
நரகமாக தோன்றுகிறதா 

தோன்றும் துயரங்களை 
தோண்டி குளியில் போடு 
தோதகமாய் விட்டுச்சென்ற 
தோலாட்டமானவர்களுக்கு நீ 
தோரணியாய் வாழ்ந்து காட்டிடு 

உயிரின் வலியை உரமாக்கி 
உறுதியோடு உலகில் வளர்ந்திடு 
உன்னதமாய் உயர்ந்து நடைபோடு 
உதாசித்தவர்கள் உன்முன் ஊனமாகட்டும் 
உன் ஒருத்தியின் வளர்ச்சி உன்போன்றோருக்கு 
உத்வேகமாய் மலர்ச்சி கொடுக்கட்டும் 

உன்னைப்போல் இனி ஒரு 
உயிர் பிரக்காமளிருக்க 
உரிமை குரல்கொடு 
உணர்வுகளை கட்டிபோட கற்கட்டும் 
உண்மையில் இவ்வுலகில் 
உள்ளம் குளிர மலரை ரசிக்கும் மனம் 

===உணர நினைப்பதில்லை 
உதிர்ந்த சருகளின் வாசனையை === 

(=====தோதகமாய் - வஞ்சகமாய் 
=====தொலாட்டம் - அற்பத்தனம் 
=====தோரணியாய் - வரலாறாய் )




















...கவியாழினி... 

2 comments:

  1. அருமையான கவிதை.....தன்னம்பிக்கை குழந்தைகள் வளர்ந்து வரவேண்டும்...அவர்களை அனாதை என்று சொல்ல மனம் ஒப்பவில்லை...அதனால் தான் தன்னம்பிக்கை குழந்தைகள் என்று குறிப்பிடுகிறேன்...கவியாழினிக்கு என் மனம் திறந்த பாராட்டுக்கள்..வாழ்க வளமுடன்!

    ReplyDelete
    Replies
    1. அப்பா உங்களின் வருகையிலும் கருத்து பகிர்விர்க்கும் மிக்க மகிழ்ச்சி ...உண்மைதான் அவர்கள் தலைகுனிந்து நடக்கும் காலம் மாறி தலை நிமிர்ந்து தவறு செய்தவர்களை தவறை உணர வைக்கும் காலம் நோக்கி ....

      Delete