Tuesday, 12 November 2013

எதையோ தேடுது மனசு


காலை எழுந்து கண் விழித்து 
அவசரமாய் ஆர்ப்பரிக்கும் சூழலில் 
வேலை என்ற பெயரில் ஓடிஓடி 
தயாராகும் நேரமற்ற நேரத்தில் 

ஆளுக்கொரு வழியாய் சொல்லி சொல்லாமலும் 
விடைபெற்று வழியோடு செல்கையில் 
வந்துநிற்கும் நிமிடம் தேனிக்களாய் மொய்க்கும் 
வாகனங்களின் பறக்கும் வேகத்தில் 

இரண்டடி நடையெடுக்க செவியில் விழும் 
ஓராயிரம் அபார சப்த்தத்தில் 
ஓட்டமும் நடையுமாய் முண்டியடித்து செல்லும் 
காலை நேர சாலை பார்க்கையில் 

ஒருரூபாய் முதல் ஓராயிரம் ரூபாய்க்காக 
ஓடிபெருக்கி ஓசை எழுப்பியும் 
ஒய்யாரமாய் அமர்ந்தும் வேலை பார்ப்பவர்களை 
ஒருகணம் உற்றுப் பார்க்கையில் 

வாடியும் மலர்ந்தும் விறுவிறுப்பாய் நுழையும் 
பள்ளி மாணவர்களை பார்க்கையில் 
உணவு வேலையென மனித கூட்டமே 
காத்திருந்து உண்ணும் நேரத்தில் 

வீட்டிற்கு போகும் நேரத்திற்காய் காத்திருந்து 
விடைப்பெற்று சோம்பலாய் செல்கையில் 
சமையலும் படிப்பும் பணி முடிப்புமாய் 
முடித்து ஒன்றுகூடி உன்கையில் 

அவரவர் பணிமுடித்து மன அமைதியோடு 
இரவு படுக்கைக்கு செல்கையில் 
படுத்து கண்கள் மூடிய நிமிடம் 
கண்கள் கண்ணுறக்கம் செல்கையில் 

தினம் தினம் நிமிடமுமாய் நெருடலாய் 
வாழ்க்கையோடு வழக்கம் போல் 
வாழ்ந்து கொண்டு இருந்தாலும் 
எதையோ தேடுது மனசு! 

...கவியாழினி...

No comments:

Post a Comment