Sunday, 3 November 2013

விலையேற்றம்


ஓலை வீட்டில் இருந்தாலும் 
ஒய்யாரமாய் நான் வாழ்ந்தேன் 
ஒரு பிடி உண்பதற்கும் என்னை 
ஒருமுறை கடித்து உண்பான் 


உழைத்து வருபவனின் உடல்வலியையும் 

என்னை ரசித்து சாப்பிட மறந்துபோவான் 
இன்று எட்டிநின்று என்னை வேடிக்கை 
பார்த்து விரைந்து செல்கிறான் 


பணம்படைத்தவன் வாங்குகிறான் 

மனம் வதங்க அறையில் கொட்டிவைக்கிறான் 
குளிர்பதன பெட்டியில் போட்டு 
என்னை கண்டபடி வாட்டுகிறான் 


ஏழை என்னை உரிக்கையிலே கண்ணில் 

கண்ணீர் வர வைத்தேன் நான் 
இன்று அவன் என்னை தூரமாக 
நினைக்கயிலே கண்ணீரில் நான் தவிக்கிறேன் 


இந்த விலையேற்றம் எனக்கு வேண்டாமே 

என்னை சுற்றி அன்பானவர்கள் காணோமே 
என் விலையையும் இறக்கிடுங்க எனக்கு 
பிடித்த இடத்தில் என்னை சேர்த்திடுங்க 


இப்படிக்கு நானுங்க வெங்காயமுங்க... 


...கவியாழினி...





No comments:

Post a Comment