Saturday, 9 November 2013

வெற்றி மகுடம்



பிறப்பு முதல் இறப்புவரை இங்கு 
அனைவரின் ஆவல் வெற்றியே 

எளிதில் கிடைத்த வெற்றி வெறும் 
எள்ளளவில் மகிழ்ச்சி தரும் 

குறுக்குவழியில் பெற்ற வெற்றி குறுகிய 
நேரத்தில் மறைந்து போகும் 

போராடாமல் கிடைத்த வெற்றி மண்ணில்
வேரோடு மறைந்து போகும் 

கடின உழைப்போடு விடாமுயற்சி செய்தவரை 
வெற்றி விட்டுவிட்டு போனதில்லை 

இறுதிவரை போரடுபவனுக்கு என்றும் வெற்றி 
இல்லை என்று சொன்னதில்லை 

துயரங்களில் துவளாமல் நடைபோட்டவனை விட்டு 
வெற்றி நகர்ந்து போனதில்லை 

மனமும் உடலும் ஒருநிலைப்படுத்தி மன்றம்ஏற 
வந்தவனை வெற்றிமறந்து போனதில்லை 

உண்மையோடு உயர உழைத்தவனை வெற்றி 
உதறி உதாசித்து சென்றதில்லை 

உறுதியோடு உன்னத உணர்வோடு ஓடிவந்தவனை 
விட்டு வெற்றி ஓடிப்போனதில்லை 

தோல்விக்கு மிரளாமல் மீண்டெழுந்து வந்தவனை 
வெற்றி தொலைத்துவிட்டு போனதில்லை 

தன்னபிக்கையோடு தங்கமாக மிளிர வந்தவனை 
வெற்றிமகுடம் சூட்டாது மடிந்ததில்லை. 

...கவியாழினி ...

No comments:

Post a Comment