Friday, 20 December 2013
Thursday, 19 December 2013
இயற்கையின் காதல் மறுசுழற்சி
மேகமகளிடம் காதல் கொண்ட
காற்று வாலிபன்
காதல் ஆசையில் தீண்டிட
கருவாக உருவாகும்
மழைத்துளி மகள் அவள்
வாழ ஆசைகொண்டு பூமிநோக்கிட
வரும் வழியில்
காலங்கள் மாறிவர பூப்பெய்தும்
அவளை தீண்டிடாமல்
மக்கள் குடைகளுக்குள் தஞ்சமுற
மீறியும் தீண்டிவிட்டால்
நடக்கிறது தலை குளியல்
அவளின் வருகையில் மகிழ்ந்து
ஆற்றங்கரைகளிலும் ஓடைகளிலும்
நடக்கிறது மகிழ்ச்சி திருவிழாக்கள்
பருவக்காதல் அவளையும்
எட்டிவிட நிகழ்கிறது சூரியனோடு
காதல் திருமணம்
மணந்த அவனோடு சங்கமித்து
மகிழ்ச்சி வாழ்வில்
ஆவியாகி அவனை சென்றடைய
காதல் கணவன்
அன்பில் மறந்து போகிறாள்
வாழ்ந்த பூமி
காய்ந்து கொண்டிருப்பதை
பூமி ஈன்ற மகள்களாம்
மரங்கள் தாயைகாக்க
மேக மகளுக்கு முறையாக
ஈன்றெடுக்கின்றன காற்றென்னும்
மகனை மீண்டும் நடக்கிறது
இயற்கையின் காதல் மறுசுழற்ச்சி
...கவியாழினி...
Wednesday, 18 December 2013
ரணத்தின் தழும்புகள்
கணவனிழந்த தனிமை பெண்ணிவள்
தன்மானத்தோடு தனியே வாழ்ந்தால்
விடவில்லை காமமுடன்
கயவர்கூட்டம் மாற்றியது அவளை
=======விலை மாதுவாய்======
தாய்தந்தையற்று தனித்து கிடந்தான்
சிறுவனிவன் அலைந்து திரிந்தான்
பசியின்கொடுமை நீட்டியகையில் ஒன்றும்
போடவில்லை திருடிஓடி தின்றவனிடம்
வயிறும் சொல்லவில்லை திருடியதை
உன்ன மாட்டேனென்று மாறிவிட்டான்
======திருடனாக======
தொலைக்காட்சியும் இணையத்தின்
வேண்டாத தளங்களும் காட்டியது
அந்தரங்கத்தை கண்டபடி
தனித்துக்கொண்டான் காமத்தை
அடுத்தவீட்டு சிறுமியிடமும் வெளியில்
சொல்ல தயங்கும் ஊமை
கண்ணியிடமும் மாறிப்போனான்
======காமுகனாய்======
வேலைத்தேடி அலைந்தான் உழைக்கிறேன்
கொடுஎன்றான் கொடுக்கவில்லையாரும்
பசியின் கொடுமை மாற்றியது வழிபறியில்
வேலையில்லை என்றவனே வந்துவிட
இருப்பதை எல்லாம் கொடுத்து உயிர்த்தப்பி
ஓடினான் இன்று மாறிவிட்டான் பிரபல
======அடிதடியாலனாய்======
மன்னிக்க வேண்டிய தவறுகளை
மலையாக வார்த்தைகளால் வதைத்து
கொட்டியது சமூகம்; திருத்த வேண்டிய
சட்டமும் கேளிசெய்யவே வெறுத்துப்போனான்
வீழ்த்தி தள்ளினான் உயிர் அருமை
தெரியாமல் இன்று உலா வருகிறான்
======தீவிரவாதியாய்======
பிறப்பதில்லை இங்கு யாரும்
சமூகதுரோகிகளாய் மாற்றுகிறோம்
துரோகிகளாய் நாம் அன்பும்
அரவணைப்பும் அடிப்படை
உரிமையும் இல்லாமல்
போகவே மாற்றபடுகிறார்கள்
சமூக துரோகிகளாய்
படும் ரணங்கள் காயமால் மாற்றமிட
தழும்புகளாய் மாறுகின்றன
======ரணத்தின் தழும்புகள்======
...கவியாழினி...
(இங்கு இப்படைப்பை பதிவதில் எனக்கும் வருத்தமே இங்கு சுட்டி காட்டும் சூழ்நிலைகளால் மட்டுமே அவர்கள் அப்படி மாற்றம் பெற்றார்கள் என்பது என் கருத்து இல்லை இப்படியெல்லாம் மாற்றமடையும் இவர்களுக்கு நம்மால் முடிந்த அன்பை காட்ட அவர்கள் சமூக விரோதிகளாக மாற்றம் பெறாமல் தடுக்க முடியும் என்பதே என் கருத்து அதை உணரவே இங்கு இந்த படைப்பு உதாரணம் : பசியில் துடிப்பவனுக்கு ஒரு வேலை உணவு கொடுத்தால் அவன் திருடனாவது இன்றைய பொழுதில் நீ இட்ட ஒரு வேலை சோற்றில் தடுத்து நிறுத்தப்படும் .)
Tuesday, 17 December 2013
அழகு
அருவிபோல் அடித்து கொட்டும்
அடைமழையின் அழகை விட
துளித்துளியாய் விழும் மழைசாரல்
மனதிற்கு சுகமோடு அழகானது
ஓராயிரம் மல்லிகையை கசக்கி எடுத்த
வாசனை திரவியத்தின் வாசத்தை விட
மலர்ந்திருந்து மனம் பரப்பும் ஓர் தோட்டத்து
மல்லிகையின் மனம் மனதிற்கு சுகமானது
இனிப்பு என எடுத்த சுத்தமான
தேனின் சுவையை விட
அளவோடு தேனிட்டு செய்த
தேன்மிட்டாயின் சுவை இனியது
பின்னிய கூந்தலில் சூடிய
முழம் முழமான பூவை விட
பின்னிய கூந்தலில் அமர்ந்திர்க்கும்
ஒற்றை ரோஜா தனி அழகு
பணத்திலே புரண்டு தினம் தினம் இன்பத்தில்
வாழும் வசதி ஆடம்பர வாழ்வை விட
அளவான வருமானத்தில் அன்பை பகிர்ந்து
இன்பமும் துன்பமும் மாறிவர வாழும்
ஏழையின் எளிய வாழ்வு அழகோ அழகு .
...கவியாழினி...
நடைபயணம்
விமானத்தில் பயணித்த
முதல் பயணம்
தொடர்வண்டியில் சென்ற
சிக்குபுக்கு பயணம்
சொகுசு வாகனத்தில் சென்ற
மகிழ்ச்சிப்பயணம்
பேருந்தில் சென்ற
தொலைதூர பயணம்
மோட்டார் வண்டியில் சென்ற
விரைவுப் பயணம்
அத்துனை பயணத்தையும்
தோற்கடித்து
அழகும் ஆனந்தமும் தந்தது
எல்லைகள் இல்லாமல் நீளாதோ
என்று எதையும் எண்ணாமல்
நண்பனோடு பேசியபடி சென்ற
நடைபயணம்
...கவியாழினி ...
Sunday, 15 December 2013
மார்கழி அறிவியலோடு அன்றும் இன்றும்
மார்கழி மாதத்திற்கென பல சிறப்புகள் உண்டு மாதங்கள் பண்ணிரெண்டிலும் மிகவும் கலைகட்டும் மாதம் இந்த மார்கழி. மாதம் முப்பது நாட்களும் குழந்தைகள், கன்னிப்பெண்கள் ,மகளிர், ஆடவர்
என அனைவரும் பக்தி ,கோலம் , கலை ,தூய்மையான நீராடல் என சுறுசுறுப்போடு இருக்கவைக்கும் மார்கழி பற்றிய சில விவரம் நாமும் அறிவோம். மார்கழி மாதத்தில் விடியற்காலை எழுந்து நீராடி கோலமிட்டு கடவுளை வணங்குவதன் உண்மை காரணம் .
அன்றைய நாட்களில் மார்கழி :-
கோலமிட்டு அதன் நடுவில் பூசணி பூ வைப்பதன் உண்மை காரணம் நம்மில் பலருக்கும் தெரியாது ஆனால் என் பாட்டி வைத்தார் அதனால் என் தாய் வைத்தார் .என் தாய் சொன்னதால் நானும் வைத்து வருகிறேனென பெண்கள் கோலமிட்டு பூ வைத்து வருகின்றனர் .
ஆனால் உண்மை அன்றைய நாட்களில் ஓர் வீட்டில் பெண் பிள்ளை இருக்கிறார்கள் என்பது வெளியில் தெரியாது பெண்கள் பெரும்பாலும் வீட்டினுள்ளே இருந்து பழகிய காலம் .அன்றைய காலத்தில் வாசலில் பெண்கள் விடியற்காலையில் எழுந்து சாணம் தெளித்து கோலமிட்டு அந்த கோலத்தின் மத்தியில் சாணம் பிடித்து வைத்து அதில் பூசணி பூவை வைப்பார்கள் , கன்னிப்பெண்கள் இல்லாத வீட்டில் கோலமிட்டு பூசணி பூ வைக்கமாட்டார்கள் கோலத்தின் நடுவே சாணம் மட்டுமே பிடித்து வைப்பார்கள் .
பெரியவர்கள் இளைஞர்கள் குழந்தைகள் அனைவரும் பஜனை பாடிக்கொண்டு ஒவ்வொரு வீதி வழியாக வருவார்கள் அப்போது ஒவ்வொரு வீட்டிலும் வாசலில் வரைந்துள்ள கோலத்தையும் அதில் வைக்கப்பட்டுள்ள பூசணி பூவையும் பார்த்து இந்த வீட்டில் திருமணத்திற்கு உரிய பெண்ணிருக்கிறாள் என தெரிந்து கொண்டு அந்த வீட்டில் சென்று பெண் கேட்டு அடுத்த மாதமான தையில் திருமணம் ஏற்பாடு செய்வார்கள். வீட்டில் திருமணதிற்கு உரிய பென்னிருகிறாள் என்பதை சுட்டிக்காட்ட இந்த வழக்கம் பின்பற்றினர் நம்முடைய மக்கள் .
இந்த பூசணி பூக்களை ஒன்றாக சாணத்தோடு எடுத்து வைத்து 29 -பது நாளோடு நிறுத்தாமல் பொங்கலன்றும் வைத்து கன்னி பொங்கல் அன்று அந்த 30 நாளுக்குமுரியவற்றை சேர்த்து எடுத்து சென்று ஆற்றில் கன்னி பெண்கள் சேர்ந்து நடுவில் வைத்து கும்மி பாட்டு பாடி ஆற்றில் கரைத்து விடுவது பண்டைய வழக்கம் .
அறிவியல் காரணம் :
மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் காற்று மண்டலத்தில் ‘ஓசோன்’ மிக அதிகமாகக் கிடைக்கிறது. இந்த ஓசோன் படலம் தான் சூரியனிடம் இருந்து வருகின்ற ‘அல்ட்ரா வயலட் கதிர்கள்’ என்று சொல்லப்படுகிற, கேடு விளைவிக்கின்ற புற ஊதாக்கதிர்களை உறிஞ்சி, உயிரினங்கள் அழியாமல் பாதுகாக்கிறது.
மார்கழி மாத அதிகாலைகளில் சூரியனின் உதயத்திற்கு முன்பாக அதிகமாகக் கிடைக்கும் இந்த ஓசோனுக்கு வீரியம் அதிகம். இதைச் சுவாசிப்பதால் நம் உடலில் உள்ள ரத்தம் விரைவாகச் சுத்தம் அடைகிறது. நரம்பு மண்டலத்தைத் துடிப்பாக வைத்துக் கொள்ள முடிகிறது. அதனால் நினைவாற்றல் பெருகுகிறது.
ஓசோன் நிறைந்த மார்கழி மாதக் காற்று தோலுக்கும், வெள்ளை சிகப்பு உயிர் அணுக்களுக்கும், புற்று நோய் தீர்வுக்கும் கூட மிகவும் உதவியாக இருப்பதாகக் கூறுகிறார்கள். இவ்வாறு நன்மை பயக்கும் ஓசோனைச் சுவாசிப்பதற்கு நாம் வெளியில் செல்ல வேண்டும். இவ்வளவு அதிகாலைக் குளிரில் வெறுமனே மக்களை வெளியே சென்று ஓசோன் நிறைந்த காற்றைச் சுவாசிக்கச் சொன்னால் பலர் கேட்க மாட்டார்கள் என்று அதில் பக்தியை சேர்த்து நம் முன்னோர் கட்டாயமாக்கி விட்டார்கள்.
ஓசோன் வாயு அதிகமாகக் கிடைக்கும் அந்த அதிகாலை நேரத்தை வழிபாட்டு நேரமாக்கி விட்டார்கள். அதிகாலையில் விழித்தெழுந்து வாசலில் நீர் தெளித்து சாணமிட்டு மொழுகி கோலமிட்டு, ஆற்றங்கரைக்குச் சென்று நீராடுவது, கோவிலுக்குச் செல்வது, பஜனை செய்வது போன்ற செயல்களில் உடல் ரீதியான நல்ல மாற்றங்களும் நிகழ்கின்றன. அதோடு ஆன்மிக வளர்ச்சியும் ஏற்படுகிறது.
இன்றைய நாட்களில் மார்கழி :-
...கவியாழினி ...
Sunday, 8 December 2013
தேவதைகளின் ராணி
ஆர்ப்பறிக்கும் அமைதியில்
அழகான
வெண்மை முகிலுக்குள்
வெண்ணிற ஆடையணிந்து
மகிழ்ச்சியின் உச்சம் கொண்டு
வானத்தில் இருந்து பறந்து
வரவில்லை
தேவதையாய் இவள்
காற்றில் அசைந்து
மரங்கள் மலர்கள் தூவ
அழகிய அளவான
குறும்புன்னகையோடு
நளின சேலையணிந்து
நாகரீக மங்கையாக
வந்தவளை பார்த்து
வியந்து நின்ற
தேவதைகளை பார்த்து
மிரளாது மிளிராது
அமைதியாய் வந்து
நின்றால் இவள்
தேவதைகளின் ராணியாய்.
...கவியாழினி...
Wednesday, 4 December 2013
என் காதல் கணவா
அத்தை மகனே என் மாமனே
என் பிள்ளையின் தகப்பனே
நீ வேடிக்கை பார்க்கையில்
நான் விதையாக இருந்தேன்
நீ விளையாடும் பருவத்திலே
நான் வேடிக்கைப் பார்த்தேன்
நீ விறுவிறுப்பாய் வளர்ந்திடவே
நான் விளையாடித் திரிந்தேன்
நீ வில்அம்பாய் காதல் பார்வை வீச
நான் விறுவிறுப்பாய் வளர்ந்தேன்
நீ விசிய காதல்அம்பில் மனைவியாக்க
நான் காதல் பார்வையை ரசித்து கரைந்தேன்
நீவாழ்வின் விதையை உற்பத்தி செய்ய
நான் மனைவியென உன்னுள் மூழ்கிபோனேன்
நீ விதைத்த விதை வேரூன்ற பாடுபட
நான் விதைக்கு பதியமிட்டு மகிழ்ந்தேன்
நீ பாடுபட்ட விதை விருட்சமாக வளர்ந்திட
நான் விதைக்கும் உனக்குமாய் வாழ்ந்தேன்
நீ விதையுமற்று விருட்சமுமற்று என்னைகாக்க
நான் விசும்பல்களாய் உன்னுள் உறங்கிப்போனேன்
நீ நான் என்பதெல்லம் நீதானென்று மாற்றம்பெற
என்னையே நான் உண்ணுள்கண்டு மடிசாய்ந்தேன்
கல்லறையிலும் கைபிடித்தபடி கண்ணுறங்குவேன்
நீ என்னுடனிருப்பாய் என் காதல் கணவா ...
...கவியாழினி...
Monday, 2 December 2013
நீயும் என்னைப்போல
அன்பிலே மூழ்கச் செய்து
கண்களால் காதல் வலைவீசி
வார்த்தையில் அமிழ்தம் ஊட்டி
இருளை ரசிக்க வைத்து
வானவில்லாய் வாழ்வை மாற்றி
கட்டிலுக்கு ஆசை மூட்டி
மலர்ந்த மலரின் மகிழ்வை காட்டி
மாலை நேரத்தில் மயக்கம் தந்து
காணும் காட்சிகளை அவனாக்கி
மேனி தொடும் தென்றலை அவன்
மூச்சுக்காற்றாய் உணரவைத்து
தனிமையை நெருப்பாக்கி
இளமையினை வாட்டி வதைத்து
வரவிற்காய் காத்திருக்க வைத்த
என் காதலனுக்காய் வருகை பார்த்து
```தவிக்கும் என்போல் நீயும் ```
உன் காதலன் அருகிலிருக்க
வளர்பிறையாய் வளர்ந்து
மகிழ்ச்சியில் மிளிர்கிறாய்
உன்னை விட்டு விலகிப்போகும்
நாட்களில் தேய்பிறையாய்
தேய்ந்து மடிகிறாயோ
```நிலவே நீயும் என்னைப்போல```
...கவியாழினி ...
Sunday, 1 December 2013
Thursday, 28 November 2013
Tuesday, 26 November 2013
ஓ இரவே
ஓ இரவே
என்னுடைய உறவுகளுக்காகவும், உணர்விற்காகவும் பலநாட்கள் என் விழிகள் இமையும் இமையும் கட்டித்தழுவும் சொர்க்கமாம் உறக்கத்தினை கண்டுகொள்ளாமல் விட்டிருக்கின்றன ,
பகலில் இருளை தேடி மனிதன் உறங்குவதும் ,இரவில் வெளிச்சம் தேடி விழித்திருப்பதும் ஒரு தனி சுகம்தான் .ஆராய்ந்துப்பார்த்தால் அழகான உண்மை தெரியும் என்பார்கள் அதுபோல முதலில் சூழ்ந்து தெரிந்த இருள் சிறிது நேரம் சிந்தை குடிகொண்டு இருளில் மூழ்க அழகாய் அத்துனையும் ரம்மியமாய் தெரிகிறது பகலும் இரவும் அல்லாமல் தனிப்பட்ட அழகிய உலகம் கண்ணில் பட்டது .அதில் நான் வார்த்தையால் வர்ணிக்க முடியா ஓர் அமைதியான உணர்வை உணர்ந்தேன் .
பகலில் அத்துனை இரைச்சல்களுக்கு மத்தியில் இனிய ஓசையையும் இருகியதாய் நினைக்க வைக்கிறது , ஆனால் இரவு அந்த அழகிய இருளில் ஓர் ஒளி சூழ தெரியும் இரவில் விட்டில் பூச்சிகளும் சின்னஞ்சிறு வண்டுகளும் இடும்
ரீங்காரங்களும் ,பூச்சிகள் இடும் ஓலங்களும் எவ்வளவு இனிமையாய் இதம் தந்து எளிமையாய் செவி வழியாய் இதயம் குடிகொள்கிறது .
இரவில் தெரியும் இருளில் விழித்திருக்கையில் மனம் எங்கோ பறக்கிறது எல்லா சிந்தனைகளும் ஒன்றாகி அமைதி பரப்புகிறது ,பலவண்ணங்கள் ஒன்றாகி கருப்பு உலகுக்குள் கொண்டு சென்று வெண்மை ஒளியை கண்ணில் காட்டுகிறது .
இரவு ஓர் இரண்டாம் உலகம் , அது ஓர் அமைதி பெட்டகம் ,இதமான இனிய பொழுது ,வார்த்தைகளின் வர்ணிப்புக்கும் எட்டாத வானம் ,
பகல் முழுதும் ஓடி உழைத்த மனிதனுக்கு காலை விடியலுக்கு புத்துனர்ச்சி கொடுக்க இப்போது அவனுக்கு தாலாட்டுபாடி சோம்பல் போக்கும் தாய்..இரவின் தாயுள்ளம் எவ்வளவு பெரியது இத்துணை மக்களுக்கும் இருள்தாய் அவளின் தாய்மடி கொடுத்து தூங்க வைக்கிறாளே.
ஓ இரவே
எத்துனை உழைப்பாளிகளை உறங்க வைத்து அயர்வு போக்குகிறாய் காலை எழுந்து உழைக்க சுறுசுறுப்பு கொடுக்கிறாய்.
ஓ இரவே
எத்துனை மழலைகளை அழவைத்து தாயின் தூக்கம்களைத்து தாயின்அன்பை சோதிக்கிறாய்,
ஓ இரவே
எத்துனை கணவன் மணைவிகளை சுகம் காண வைத்து சுகத்துக்குள் மூழ்கடிக்கிறாய்,
ஓ இரவே
எத்துனை காதலர்களை தவிக்க வைக்கிறாய்,
ஓ இரவே
எத்துனை பணிகளை இந்நேரத்திலும் செய்து முடிக்க வைக்கிறாய்.
விசித்திர விஞ்ஞான உலகில் தவழும் அமைதி சித்திரமாய் விளங்கும் இரவே
என்னையும் இந்நேரம் இப்படி சிந்திக்க தூண்டி இப்படி எழுத வைக்கிறாய்
அழகின் வனப்பே ,
அமைதியின் ஊற்றே,
புது உலகின் புது யுகமே,
ஓ இரவே.
...கவியாழினி ...
Friday, 22 November 2013
Tuesday, 19 November 2013
பத்து நிமிடம்
அவசரமாக பணிக்கு போக வெளியில் வர
பத்துநிமிடம் காக்கவைத்த தங்கை அவளை
கடிந்துகொண்டு வாசலில் அமர்ந்தேன்
சாந்தமுடன் வந்த தென்றல்
மென்மையாக என்னை வருடிச்செல்ல
என்னுள்ளும் அமைதி பரப்பியது
எதிரே பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள்
பார்வைக்கு குளிர்ச்சியூட்ட இங்குமங்குமாய்
சிற்சிறு எறும்புகளின் வரிசை கண்ணில் பட்டது
எங்கே இவற்றின் பயணமென்று என்
கண்கள் தேட காட்டிகொடுத்தது இறந்துபோன
ஓர் இலைபுளுவிர்க்கு அங்கே அமைதியான
முறையில் இறுதி அஞ்சலி நிகழ்ந்ததை
சற்று என் பார்வை நகர ஈரப்பத மணலில்
மொய்க்கும் கால்களோடு மரவட்டைகள்
அங்குமிங்குமாய் எங்கோ எதையோ தேடின
சற்று நிமிர்ந்தேன் கண்ணாடி இறக்கைகளோடு
தும்பிகள் வட்டம் கட்டி எதையோ தேடி பறந்தன
சுற்றி இருந்த மரங்களில் இங்கொன்றும்
அங்கொன்றுமாய் குயில்கள் பாட ஒன்றாக
கலந்து சங்கீதம் செவியை கட்டிப்போட்டது ,
வெளியில் எட்டிப்பார்க்க ஆடுகள்
ஆட்டுக்குட்டிகளோடு இரவு நினைவுகளை
அசைபோட்டபடி சூரியன் உதயமும் பெரிதாக
கொள்ளாமல் அமைதியாய் அன்பு
பகிர்ந்து கொண்டிருந்தன எதையோ தேடியபடி
சட்டென வந்து நின்ற தங்கையிடம்
இத்தருனத்திர்க்கு நன்றி கூறி நானும்
நடைபோட்டேன் எதையோ தேடி ...
...கவியாழினி ...
Subscribe to:
Posts (Atom)