Tuesday 19 November 2013

பத்து நிமிடம்


அவசரமாக பணிக்கு போக வெளியில் வர 
பத்துநிமிடம் காக்கவைத்த தங்கை அவளை 
கடிந்துகொண்டு வாசலில் அமர்ந்தேன் 

சாந்தமுடன் வந்த தென்றல் 
மென்மையாக என்னை வருடிச்செல்ல 
என்னுள்ளும் அமைதி பரப்பியது 

எதிரே பூத்துக்குலுங்கும் வண்ண மலர்கள் 
பார்வைக்கு குளிர்ச்சியூட்ட இங்குமங்குமாய் 
சிற்சிறு எறும்புகளின் வரிசை கண்ணில் பட்டது 

எங்கே இவற்றின் பயணமென்று என் 
கண்கள் தேட காட்டிகொடுத்தது இறந்துபோன 
ஓர் இலைபுளுவிர்க்கு அங்கே அமைதியான 
முறையில் இறுதி அஞ்சலி நிகழ்ந்ததை 

சற்று என் பார்வை நகர ஈரப்பத மணலில்
 மொய்க்கும் கால்களோடு மரவட்டைகள் 
அங்குமிங்குமாய் எங்கோ எதையோ தேடின 

சற்று நிமிர்ந்தேன் கண்ணாடி இறக்கைகளோடு 
தும்பிகள் வட்டம் கட்டி எதையோ தேடி பறந்தன 

சுற்றி இருந்த மரங்களில் இங்கொன்றும் 
அங்கொன்றுமாய் குயில்கள் பாட ஒன்றாக 
கலந்து சங்கீதம் செவியை கட்டிப்போட்டது , 

வெளியில் எட்டிப்பார்க்க ஆடுகள் 
ஆட்டுக்குட்டிகளோடு இரவு நினைவுகளை 
அசைபோட்டபடி சூரியன் உதயமும் பெரிதாக 

கொள்ளாமல் அமைதியாய் அன்பு
 பகிர்ந்து கொண்டிருந்தன எதையோ தேடியபடி 

சட்டென வந்து நின்ற தங்கையிடம் 
இத்தருனத்திர்க்கு நன்றி கூறி நானும் 
நடைபோட்டேன் எதையோ தேடி ... 

...கவியாழினி ...

No comments:

Post a Comment