Monday, 18 November 2013
Sunday, 17 November 2013
Thursday, 14 November 2013
இழந்துவிடாதே
பெற்றோரை இழந்தவனென
உன்னை நீயே கருணையுரைக்காதே
பெற்றோரை இழந்தாலும்
நற்பெயர்பெரும் பெருவாழ்வு வாழலாம்
உறவினர்களால் உதறி
தள்ளப்பட்டவனென உணர்விழந்து
ஓரம் போகாதே
உறவினரை இழந்தாலும்
உலகில் உன்னத வாழ்வு வாழலாம்
கல்வி கற்காதவனெனஉன்னை
நீயே மக்கிக்கொள்ளாதே
கல்வி இழந்தும் கற்க்காமலும்
தம் உண்மை அறிவால் கல்வி
பயில்பவர்களுக்கு வழிக்காட்டியாய்
வாழ்ந்த பலர்போல் வாழலாம்
அடிப்படை உரிமைகளையும் அடைய
முடியாதவனென அழுகி சாகாதே
உடையின்றி உணவின்றி
உரைவிடமின்றியும் உன்னத
உழைப்போடு ஊரே வியக்க
உன்னத வாழ்வு வாழலாம்
நண்பர்களும் யாருமற்று
நாதியற்றவனாய் வாழ்கிறேனென
நசுங்கிப்போகாதே நாளை உன்
முன்னேற்றத்தில் நல்லநண்பர்களும்
உன் பாதையில் தேடி வந்து
களிக்கும் வாழ்வு வாழலாம்
பெற்றோரும் மற்றோரும்
உற்றோரும் நண்பரும்
உயிரும் இல்லாமலும்
இவ்வுலகில் நற்பெயரோடு
புகழோடு பல வாழ்வு வாழலாம்
நீ தன்னம்பிக்கை
இழந்து போனால் இருந்தும்
இறந்தே வாழ்வாய்
இழந்துவிடாதே எப்போதும்
உன் வாழ்கையெனும்
...தன்னம்பிக்கையை...
...கவியாழினி ...
Wednesday, 13 November 2013
விவாக(ம்) ரத்து
@@@ விவாக(ம்)ரத்து @@@
நந்த வனத்து தேன்சிட்டுகளாய்
சிந்தை சொல் கேளாது
வந்த நேரங்காலம் பாராது
விந்தைக் காதல் கொண்டோம்
அந்த ரத்துப்பறவைகளாய்ப் பறந்து
அந்தி சாயும்நேரம் மறந்தோம்
காந்த நிலாவானம் வந்தும்
நீந்தித் திரிந்தோம் காதலுக்குள்
காமத்தீ பற்றிவிட நாள்குறித்தோம்
திரு மனத்திற்கு உறவினரோடு
கோபத்தீ சூழ்ந்தாலும் கன்றுகளென
பெரு மனங்கொண்டு முடித்தனர்
சாபத்தீ தீண்டாமல் வாழவேண்டி
உறு கொண்டாலும் வாழ்த்தினர்
வேகத்தீ யாய் மனம்பொங்க
பெருங் கடலாய் இன்புற்றோம்
தேனிலவு லயித்துப்போனது மீட்டிய
கட்டிலினிசை தினம் கேட்டு
வெண்ணிலவு கரையென தோன்றியது
வாழ்வினிசை தினம் பார்த்து
சிறுபிளவு தோன்றியது இல்லறத்தின்
இனியஇசை மீட்ட வழித்தெரியாமல்
சிறிதளவு நிம்மதியும் சிதறிப்போனது
பண்ணிசை புரிதல் தவறியதால்
புரிந்து பேசிக்கொண்ட மௌனங்கள்
புரியாமல் பேசிக்கொண்டன இன்று
பரிந்து பகிர்ந்துகொண்ட தருணங்கள்
அறியாமல் தகர்ந்து போயின
செறிந்து வளர்ந்திருந்த அன்பு
புரிதலில்லாமல் சிதறிப் போயின
கடிந்து கொள்கிறது ஒவ்வோர்நாளும்
விடியல் வேண்டா மென்று
விட்டுக்கொடுத்த மனங்கள் சிறுநேரம்
விட்டுக்கொடுத்து பேச முடியாமல்
தட்டிக்கொடுத்து இணைந்த சகிப்புத்தன்மை
தட்டுக்கெட்டு சலித்துப் போனதால்
கட்டுப்படுத்த முடியாத அகந்தைக்கோபத்தால்
மெட்டில்லாத பாடலானது வாழ்வாய்
எட்டிப்பிடிக்க முடியாத வெண்ணிலாவென
எட்டிஉதைக்குது வாழ்வு மனதிற்கு
வெறும் காலங்கடத்தி பேசிய
நாட்களில் பகிர்ந்து கொள்ளவில்லை
வருங் காலத்தில் வாழ்வின்
நாட்களை வகுக்கும் வழிகளை
பெரும் போராட்டமான வாழ்வினில்
நாட்கள் இனிநகர வேண்டாமென
இரு மனங்களும் இணைந்தெடுத்திட்டு
நாளையோடு விவாக(ம்) ரத்து.
...கவியாழினி...
Tuesday, 12 November 2013
எதையோ தேடுது மனசு
காலை எழுந்து கண் விழித்து
அவசரமாய் ஆர்ப்பரிக்கும் சூழலில்
வேலை என்ற பெயரில் ஓடிஓடி
தயாராகும் நேரமற்ற நேரத்தில்
ஆளுக்கொரு வழியாய் சொல்லி சொல்லாமலும்
விடைபெற்று வழியோடு செல்கையில்
வந்துநிற்கும் நிமிடம் தேனிக்களாய் மொய்க்கும்
வாகனங்களின் பறக்கும் வேகத்தில்
இரண்டடி நடையெடுக்க செவியில் விழும்
ஓராயிரம் அபார சப்த்தத்தில்
ஓட்டமும் நடையுமாய் முண்டியடித்து செல்லும்
காலை நேர சாலை பார்க்கையில்
ஒருரூபாய் முதல் ஓராயிரம் ரூபாய்க்காக
ஓடிபெருக்கி ஓசை எழுப்பியும்
ஒய்யாரமாய் அமர்ந்தும் வேலை பார்ப்பவர்களை
ஒருகணம் உற்றுப் பார்க்கையில்
வாடியும் மலர்ந்தும் விறுவிறுப்பாய் நுழையும்
பள்ளி மாணவர்களை பார்க்கையில்
உணவு வேலையென மனித கூட்டமே
காத்திருந்து உண்ணும் நேரத்தில்
வீட்டிற்கு போகும் நேரத்திற்காய் காத்திருந்து
விடைப்பெற்று சோம்பலாய் செல்கையில்
சமையலும் படிப்பும் பணி முடிப்புமாய்
முடித்து ஒன்றுகூடி உன்கையில்
அவரவர் பணிமுடித்து மன அமைதியோடு
இரவு படுக்கைக்கு செல்கையில்
படுத்து கண்கள் மூடிய நிமிடம்
கண்கள் கண்ணுறக்கம் செல்கையில்
தினம் தினம் நிமிடமுமாய் நெருடலாய்
வாழ்க்கையோடு வழக்கம் போல்
வாழ்ந்து கொண்டு இருந்தாலும்
எதையோ தேடுது மனசு!
...கவியாழினி...
Monday, 11 November 2013
கேள்விகேள்! கேள்விகேள்!
சிரிப்பும் கோவமும் அழுகையும்
ஆத்திரமும் உள்ளிருந்து வெளிவர
சாந்தமுடன் முகம் கொண்டு
சாந்தமற்ற மனம் கொண்டு
ஆயிரமாயிரம் எண்ணங்கள் ஆர்ப்பரித்து
அமைதியாக காட்சியளிக்கும் மனத்துள்
அடக்கமுடியா கேள்விகள் அடிக்கடி
மேலெழும்பி வந்து சென்றிடும்
உலகம் உருவானதெப்படி? -அதை
பார்க்காமல் அறியாமல் அறிவியலென்பதெப்படி?
உயிர்கள் பிறப்பு உருவானதெப்படி ?
இறப்பின் பின் நிகழ்வதை அறிவதெப்படி ?
மரங்களழித்து மனிதன் வாழ்வதெப்படி ?
மாசு நிறைந்த உலகம் மாறினால்
நாளை நோய்கள் குறைவதெப்படி?
தெரிந்தும் நாம் மாசாக்குவதெப்படி?
எப்படி? எதற்கு? ஏன்? எதனால்?
எதற்காக? எவ்வாறு ? எங்கு ?
கேட்கும் ஆயிரமாயிரம் கேள்விகளை
காண்போரிடமும் கண்ட இடத்திலும்
வாரி இறைக்காதே வம்பிழுக்காதே
வழக்கை வாங்கி கட்டிக்கொள்ளாதே
தேவை ஏற்படும் இடத்தில்
தெறிக்கட்டும் உன் கேள்விகள்
பதில் தேடும் வேளையில்
உதிக்கட்டும் உன் கேள்விகள்
கேள்விக்கேள் கேள்விக்கேள்
சிந்தித்து கேள்விகளை கேட்பவர்கள்
இவ்வுலகில் அறிவாளி
கேள்விகளுக்கு சரியான பதிலை
தேடுபவர்கள் புத்திசாலி
நீ கேள்விகேட்டு கேள்விகேட்டு
பதில்தேடு ;தேடி தேடி
தெரிந்துக்கொள் தெளிவுகொள்
புத்தியுள்ள அறிவாளியாய் மாறிடு
அறிவுள்ள புத்திசாலியாய் உருவெடு
கேள்விகள் தொடரட்டும்
தொடந்து கொண்டே இருக்கட்டும்
பதில்கள் கிடைக்கட்டும்
கிடைத்துக்கொண்டே இருக்கட்டும்
உன் மனதுள் கேள்விக்குறிகள்
பலவும் பிறக்கட்டும் பிறந்துகொண்டே
இருக்கட்டும் பதிலும் கிட்டட்டும்.
கேள்விகேள்! கேள்விகேள்!
...கவியாழினி...
Subscribe to:
Posts (Atom)




.jpg)

